Request for staff to update their Trainees details
Placement structure cell 27-09-2024 - CLICK ME

9 June 2023

TECHNOLOGY CENTER INDUSTRY 4.O NEW BUILDING ,GOVT. ITI, MANIKANDAM TRICHY OPENING DATE :08-06-2023

Tata Technologies, an engineering and product development services firm, has inaugurated 22 modern industry 4.0 technology centres. The Chief Minister of Tamil Nadu MK Stalin inaugurated the Industry 4.0 Technology Centres at an event held in Oragadam, Chennai.




திருச்சி 8.06.2023

திருச்சியில் ரூபாய் 34.65 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி மையம்- ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்..

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் 22 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் ரூபாய் 762.30 கோடி மதிப்பீட்டில் டாட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள  4.0 தொழில்நுட்ப மையங்கள் தொடக்க விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள்  காணொளி காட்சி வாயிலாக இன்று  திறந்து வைத்தார்...

இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மணிகண்டம் பகுதியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூபாய் 34.65 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.. இதன்பின் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் M.பழனியாண்டி குத்து விளக்கு ஏற்றி தொழிற் பயிற்சி மையத்தினை பார்வையிட்டார்...

































































J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.MANIKANDAM